புவனகிரி : புவனகிரியில், சாலையில் நடந்து சென்ற முதியவர் மீது டூரிஸ்ட் பஸ் மோதியதில் சம்பவ இடத்தில் இறந்தார்.
புவனகிரி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பெரியசாமி, 75; விவசாயி. இவர், நேற்று காலை 5:30 மணிக்கு, வீட்டிலிருந்து டீ குடிப்பதற்காக புவனகிரி கடை வீதிக்கு நடந்து சென்றார். அப்போது, நீலகிரியை சேர்ந்த பக்தர்கள் பயணம் செய்த டிஎன்30 ஏகே 7488 என்ற பதிவெண் கொண்ட தனியார் பஸ், நடந்து சென்ற முதியவர் பெரியசாமி மீது மோதியதில் சம்பவ இடத்தில் இறந்தார்.
தகவல் அறிந்த புவனகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி, சப் இன்ஸ்பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உடலை கைப்பற்றி சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இறந்த பெரியசாமியின் உறவினர் மணிமாறன் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிந்து, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் சின்னாளம்பட்டியைச் சேர்ந்த பஸ் டிரைவர் எட்வின், 31, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.