மானாமதுரை,--மானாமதுரையிலிருந்து அன்னவாசல் செல்லும் ரோடு குண்டும்,குழியுமாக இருப்பதினால் வாகன ஓட்டிகள், மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மானாமதுரையில் இருந்து அன்னவாசல் வழியாக நரிக்குடி செல்லும் ரோடு போடப்பட்டு 10 வருடங்களுக்கும் மேலாகிவிட்டது.
மானாமதுரை- ராமேஸ்வரம் 4 வழிச்சாலையில்இருந்து பிரியும் இடத்தில்இருந்து இந்த ரோடு மிகவும் மோசமான நிலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு உள்ளதால் வாகனஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த ரோட்டில் தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படுவதால் மாணவர்களும் அச்சப்பட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக இந்த ரோட்டை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.