சென்னை:அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வம் அறிக்கை:
தமிழகத்தில் கல்வித் தகுதி நிலை குறித்து, 920 கிராமங்களில் உள்ள, 3 முதல், 16 வயது வரையிலான, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களிடம், ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
முதல் வகுப்பு படிக்கும், 42 சதவீத மாணவர்களால், 9 வரையிலான எண்களைக் கூட படிக்க இயலவில்லை. முதல் வகுப்பில், 53 சதவீத மாணவர்கள்; இரண்டாம் வகுப்பில், 23 சதவீத மாணவர்கள், ஆங்கிலத்தில் உள்ள பெரிய எழுத்துக்களைக் கூட படிக்க இயலவில்லை.
கல்வி அறிவில், தேசிய சராசரிக்கு கீழ் தமிழகம் உள்ளது.
ஆட்சி அமைந்து, 20 மாதங்களைக் கடந்த நிலையிலும், மாநில கல்விக் கொள்கையை அறிவிக்காதது, மாணவர்களின் கல்வி மீது, தி.மு.க., அரசுக்கு அக்கறை இல்லை என்பதை உணர்த்துகிறது.
மாணவரிடையே கற்றல் திறனை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை முதல்வர் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.