விருத்தாசலம் : விருத்தாசலம், புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 60. இவர், நேற்று காலை, ஜங்ஷன் சாலையில் உள்ள வங்கியில் இருந்து ரூ.2.50 லட்சத்தை எடுத்து, தனது பைக்கில் இருந்த பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு பஸ் நிலையம் சென்றார்.
பின், அங்குள்ள சூப்பர் மார்க்கெட்டில் மளிகைப் பொருட்கள் வாங்கிக் கொண்டு பைக்கில் புறப்பட்டபோது, பைக்கில் இருந்த பெட்டி உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரொக்கம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்த விருத்தாசலம் போலீசார் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள காண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.