திருவண்ணாமலை:திருவண்ணாமலை அ.தி.மு.க., அலுவலகத்தில் நேற்று முன்தினம் இரவு, எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில் பங்கேற்ற அ.தி.மு.க., அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் கூறியதாவது:
அ.தி.மு.க.,வை படுகுழியில் தள்ளலாம் என தலைமைக் கழகத்தை சூறையாடியவர்களை, மீண்டும் கட்சியில் சேர்க்க கட்சித் தொண்டர்கள் விரும்ப மாட்டார்கள்.
ஒரே நாடு; ஒரே தேர்தலுக்கு, பழனிசாமி ஏற்கனவே ஆதரவு தெரிவித்து விட்டார். அவரை சசிகலா சந்திக்க உள்ளதாகக் கூறுவது, கேலிக்கூத்தாக உள்ளது. நிச்சயமாக அப்படி நடப்பதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.