விழுப்புரம் : விழுப்புரம் அடுத்த பிடாகம் தென்பெண்ணையாற்றில் நேற்று ஆற்றுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
அதனையொட்டி, ஆற்றில் ஏராளமான கடைகள் போடப்பட்டிருந்தன. பழங்கள், விளையாட்டுப் பொருட்கள், கரும்பு, கிழங்கு வகைகள் விற்பனை செய்யப்பட்டன. மேலும், ராட்டிணம், ஊஞ்சல் விளையாட்டு அம்சங்களும் நிறைந்திருந்தன.
விழாவில் பிடாகம் பகுதியைச் சுற்றியுள்ள ஏராளமானோர் குடும்பத்துடன் ஆற்றில் குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனர்.
பரிக்கல் லட்சுமி நரசிம்மர் உற்சவமூர்த்தி மற்றும் பிடாகம், குச்சிப்பாளையம், பேரங்கியூர், அரசூர், அத்தியூர், கண்டமானடி, வழுதரெட்டி, சாலாமேடு, மருதுார், கொளத்துார், ரெட்டிப்பாளையம், கண்டம்பாக்கம், பேரங்கியூர், ஆனாங்கூர், சாலையகரம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கோவில்களில் இருந்து உற்சவமூர்த்திகள் ஆற்றில் தீர்த்தவாரியாகி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.