விழுப்புரம் : சென்னையில், அமைச்சர் பொன்முடி வீட்டிற்குச் சென்று, முதல்வர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.
சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வீட்டிற்கு, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றார்.
பொன்முடியின் சகோதரர் டாக்டர் தியாகராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து, அவரது படத்திற்கு மலர் துாவி மரியாதை செலுத்தினார்.
அமைச்சர்கள் நேரு, வேலு, கள்ளக்குறிச்சி எம்.பி., கவுதமசிகாமணி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய துணைத் தலைவர் அசோக் சிகாமணி, மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உடனிருந்தனர்.