கல்லுாரியில் நடந்த சண்டையில் என் மகன் தவறு செய்திருந்தால், தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கச் சொல்வேன். எனக்கு முதலில் தேசம் தான் முக்கியம். இரண்டாவது கட்சி, மூன்றாவது தான் குடும்பம்.
பண்டி சஞ்சய், தெலுங்கானா பா.ஜ., தலைவர்
எனக்கு ஒரு கனவு உள்ளது!
எனக்கு ஒரே ஒரு கனவு மட்டும் தான் உள்ளது. எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அது நம் நாட்டுக்கு மிகப் பெரிய பலனை அளிக்கும். இதை தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.
நிதிஷ்குமார், பீஹார் முதல்வர், ஐக்கிய ஜனதா தளம்
அச்சுறுத்தும் கொள்கை!
இரு மதங்களுக்கு இடையே, ஜாதிகளுக்கு இடையே, மொழிகளுக்கு இடையே சண்டை மூட்டும் வேலையை தான் பா.ஜ., செய்து வருகிறது. இக்கட்சியின் திட்டங்கள், கொள்கைகள் அனைத்துமே இந்த சமூகத்தில் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.
ராகுல், காங்கிரஸ் எம்.பி.,