வாகனங்களால் இடையூறு
வால்பாறை, ஸ்டேன்மோர் சந்திப்பில், போக்குவரத்துக்கு இடையூறாக, நெடுஞ்சாலையில் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், நெரிசல் ஏற்படுவதுடன், விபத்துகளும் நடக்கின்றன. ரோட்டோரத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
- -விக்கி, வால்பாறை.
ரோடு படுமோசம்
ஆலாம்பாளையத்தில் இருந்து, ஏரிப்பட்டி வரை செல்லும் ரோடு, மிக மோசமாக சேமதடைந்து கிடக்கிறது. ரோடு முழுவதும், மண் நிறைந்து கிடப்பதால், இந்த வழியாக செல்லும், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். ரோட்டை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- -நாகராஜ், ஆலாம்பாளையம்.
பள்ளத்தில் சிக்கிய வாகனம்
பொள்ளாச்சி, ராஜாமில் ரோட்டில் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழி அருகே ஏற்பட்டுள்ள ஆபத்தான பள்ளங்களால், அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. நேற்று முன்தினம் இரவு, இந்த ரோட்டில் சென்ற சரக்கு வாகனம் ஒன்று, பள்ளத்தில் சிக்கியது. பொதுமக்கள் போராடி வாகனத்தை மீட்டனர். ரோட்டை சீரமைக்க, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சரண்யா, பொள்ளாச்சி.
குப்பை எரிப்பு
ஆனைமலை, பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, ஆஞ்சநேயர் கோவிலை ஒட்டி, குப்பை எரிக்கப்படுகிறது. பேரூராட்சி ஊழியர்களே, குப்பையை தரம் பிரிக்காமல், தீயிட்டு கொளுத்துகின்றனர். பேரூராட்சி நிர்வாகம், இதை தடுக்க வேண்டும்.
- -அஜீத்குமார், ஆனைமலை.
அங்கன்வாடி மேற்கூரை சேதம்
பொள்ளாச்சி வடக்கு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, ஆர்.பொன்னாபுரத்தில் உள்ள அங்கன்வாடி மைய மேற்கூரை சேதமடைந்துள்ளது. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை. சேதமடைந்துள்ள மேற்கூரையை ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சீரமைக்க வேண்டும்.
- -முருகன், ஆர்.பொன்னாபுரம்.
வேகத்தடை அமைக்கணும்!
வால்பாறை அடுத்த சோலையாறு அணை செல்லும் ரோட்டில், அதிவேகமாக வரும் வாகனங்களால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. தேவையான இடங்களில், வேகத்தடை இல்லாததே, இதற்கு காரணமாகும். நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், இந்த ரோட்டில், தேவைப்படும் இடங்களில், வேகத்தடை அமைக்க வேண்டும்.
- -நடராஜன், சோலையாறு அணை.
எச்சரிக்கை பலகை இல்லை
சீனிவாசபுரத்தில் இருந்து, காளிபாளையம் வழியாக, நாயக்கன்பாளையம் செல்லும் ரோடு, மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த ரோட்டில், ஆங்காங்கே 'எஸ்' -வளைவுகள் உள்ளன. எதிரே வரும் வாகனங்கள், பார்வைக்கு தெரிவதில்லை. வளைவுகளில் எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும்.
- செல்வம்-, நாயக்கன்பாளையம்.
கனரக வாகனங்களால் சிக்கல்
பொள்ளாச்சி நல்லுார் கைகாட்டியில், ரோட்டின் இருபக்கமும் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் அணிவகுத்து நிறுத்தப்படுகின்றன. இதனால், கிருஷ்ணா குளம் ரோட்டில் இருந்து பொள்ளாச்சி வரும் வாகனங்கள் திரும்பும் போது, ரோட்டில் வரும் வாகனங்கள் பார்வைக்கு தெரிவதில்லை. விபத்து அபாயம் உள்ளது. ரோடு சந்திப்பு பகுதியில், கனரக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
- முத்துக்குமார், ஜமீன் ஊத்துக்குளி.