சூலூர்:அப்பநாயக்கன்பட்டியில் பல குடும்பங்கள் குடியிருக்கும் நிலத்தை, வகை மாற்றம் செய்து பட்டா வழங்க கோரி, வருவாய் துறை அமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
கோவை வந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ராமச்சந்திரனிடம், அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி தலைவர் சாந்தி ராஜேந்திரன் அளித்த மனு விபரம்:
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட அப்பநாயக்கன்பட்டி ஊராட்சியில், 3,4,5வது வார்டுகளில், 200 குடும்பங்கள், 20 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்றனர்.
அவர்கள் குடியிருக்கும் இடங்கள், மந்தை புறம்போக்காக உள்ளதால், வங்கி கடனோ மற்றும் உதவிகளோ பெற முடியாமல் தவிக்கின்றனர்.
எனவே, அந்த பகுதியை நத்தமாக மாற்றி, குடியிருப்போருக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.