சென்னை:'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் நடத்தப்படும் குறும்படத் திருவிழாவுக்கு, பிப்.,1க்குள் படைப்புகளை அனுப்ப வேண்டும்.
'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், குறும்படத் திருவிழா அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், 14 வயது முதல் 40 வயதுக்குள் உள்ள அனைவரும் பங்கு பெறலாம்.
தமிழ், ஆங்கிலத்தில், 6 நிமிடங்களுக்கு மிகாமல், குறும்படங்கள் இருக்க வேண்டும். அது புனைக்கதை, ஆவணப்படம், அனிமேஷன் என எந்த வகையிலும் இருக்கலாம்.
முதல் பரிசாக, 50 ஆயிரம்; இரண்டாம் பரிசாக, 25 ஆயிரம்; மூன்றாம் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இதில் வெற்றி பெறுவோருக்கு, நான் முதல்வன் திட்டம் அல்லது புகழ்பெற்ற திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு நிறுவனங்களுடன், மூன்று மாதம் இன்டெர்ன்ஷிப் மற்றும் வேலை வாய்ப்பு வழங்கப்படும்.
மேலும் விபரங்களுக்கு, www.naanmudhalvan.tn.gov.in இணையதளத்தை பார்வையிடலாம்.