வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-இரட்டை இலை சின்னம் தொடர்பாக, தலைமை தேர்தல் கமிஷனரை சந்திக்க, பழனிசாமி தரப்பினர் முடிவு செய்திருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.
![]()
|
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தேர்தலில், அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம் தரப்பில் யார் போட்டியிட்டாலும், இரட்டை இலை சின்னம் பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
கடந்த முறை இத்தொகுதியில், த.மா.கா., வேட்பாளர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். இம்முறை த.மா.கா., போட்டியிட்டாலும், இரட்டை இலை சின்னத்தை பெற முடியாது. இதைக் காரணம் காட்டி, பா.ஜ., தரப்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பழனிசாமி தரப்பினர், த.மா.கா., போட்டியிடட்டும்; இல்லையெனில், சின்னம் கிடைக்காவிட்டாலும், தனித்து களம் இறங்கலாம் என்ற முடிவில் உள்ளனர்.
அதற்கேற்ப, டில்லியில் இந்திய தலைமை தேர்தல் கமிஷனரை, அடுத்த வாரம் சந்தித்து, தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி கேட்க, பழனிசாமி தரப்பு முடிவு செய்துள்ளது.
மேலும், பன்னீர்செல்வம் தரப்பு இடைத்தேர்தலில், அ.தி.மு.க., பெயர், சின்னம், கொடி, போன்றவற்றை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
![]()
|
அதேபோல பன்னீர்செல்வம் தரப்பினரும், தேர்தல் கமிஷனரை சந்திக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.,வில் பன்னீர்செல்வம் அணி தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலர்கள் ஆலோசனைக் கூட்டம், அரசியல் ஆலோசகர்பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில், சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில், வரும் 23ம் தேதி மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.இதில், வீரவணக்க நாள் பேரணி நடத்துவது குறித்தும், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது.