Remove Party Flags, Banners at Rotorams : Innocent motorists involved in accidents | ரோட்டோரங்களில் கட்சிகொடிகள், பேனர்களை அப்புறப்படுத்துங்க : விபத்துக்களில் சிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள் | Dinamalar

ரோட்டோரங்களில் கட்சிகொடிகள், பேனர்களை அப்புறப்படுத்துங்க : விபத்துக்களில் சிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள்

Added : ஜன 20, 2023 | கருத்துகள் (3) | |
மாவட்டம் முழுவதும் கட்சி,அரசு,தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அரசியல் வாதிகள் வருகின்றனர்.அவர்களை வரவேற்பதற்காக அரசியல் கட்சியினர் ரோட்டோரங்களில் கட்சி கொடிகள்,ராட்சத பேனர்களை வைக்கின்றனர்.ரோட்டோரங்களில் கட்டப்படும் கட்சி கொடிகள்,பேனர்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது. சில நேரங்களில் ரோட்டில் சரிந்து விழ அப்பகுதியில் நடந்து
Remove Party Flags, Banners at Rotorams : Innocent motorists involved in accidents   ரோட்டோரங்களில்  கட்சிகொடிகள், பேனர்களை அப்புறப்படுத்துங்க : விபத்துக்களில் சிக்கும் அப்பாவி வாகன ஓட்டிகள்

மாவட்டம் முழுவதும் கட்சி,அரசு,தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அரசியல் வாதிகள் வருகின்றனர்.அவர்களை வரவேற்பதற்காக அரசியல் கட்சியினர் ரோட்டோரங்களில் கட்சி கொடிகள்,ராட்சத பேனர்களை வைக்கின்றனர்.ரோட்டோரங்களில் கட்டப்படும் கட்சி கொடிகள்,பேனர்கள் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்துகிறது.

சில நேரங்களில் ரோட்டில் சரிந்து விழ அப்பகுதியில் நடந்து செல்லும் அப்பாவி மக்களும் பாதிக்கின்றனர். பேனர்கள்,கட்சி கொடிகள் கட்ட வேண்டாம் என கட்சி தலைமை அறிக்கை வெளியிட்ட பிறகும் இந்நிலை தொடர்வதால் மக்கள் தர்ம சங்கடத்தை சந்திக்கின்றனர்.

தனியார் நிறுவனங்களும் இதே போக்கையே கடை பிடிக்கிறது.

சிலர் போலீசாரின் அனுமதியில்லாமலே பொது இடங்களில் பேனர்கள், கட்சி கொடிகளை வைத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துகின்றனர்.

போலீசார் அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டால் கட்சி பெயர்களை சொல்லி கட்சிக்காரர்கள் குடசல் கொடுக்கின்றனர்.

தொடரும் இப்பிரச்னையால் செய்வதறியாது அதிகாரிகளே திணறுகின்றனர். விபத்துக்களில் சிக்கி சிலர் கை,கால்களை இழக்கும் நிலையும் தொடர்கிறது.மாவட்ட நிர்வாகம்தான் இதன் மீது தனிக்கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X