ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை கிராமத்தில், சுந்தரராஜ பெருமாள் கோவில் அருகே, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி உள்ளது.
35 ஆண்டுகளை கடந்த மேல்நிலைத் தொட்டி, தற்போது வலுவிழந்து வருகிறது. இதன் துாண்கள் முதல் மேல்தளம் வரை, கான்கிரீட் பெயர்ந்து, உதிர்ந்து வருகிறது.
எனவே, இந்த மேல்நிலை குடிநீர் தொட்டி எந்நேரத்திலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. இதன் அருகே, அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது.
அதில், 25 குழந்தைகள் படித்து வருகின்றனர். ஆபத்தான குடிநீர் தொட்டி யின் அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வரும் குழந்தைகளின் பாதுகாப்பு, கேள்விக்குறியாக உள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.