பண்ணுார்:திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுந்தரம் மகள் ராஜேஸ்வரி, 19. இவர், மப்பேடு அடுத்த பண்ணுார் கிராமத்தில் தங்கி, கடந்த ஆறு மாதமாக, ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தனியார் 'மொபைல் போன்' தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 17ம் தேதி, இவரது தாயார் உமா மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அவர் பேசவில்லை.
இதையடுத்து, இவரது தாயார், மறுநாள் பண்ணுாரில் உள்ள தனது மகள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்து பார்த்தபோது, மகள் காணாமல் போனது தெரிய வந்தது. அக்கம் பக்கம் விசாரித்தும், தகவல் கிடைக்கவில்லை.
இதுகுறித்து, உமா கொடுத்த புகாரின்படி, மப்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.