உளுந்தை:கடம்பத்துார் ஒன்றியம் உளுந்தை ஊராட்சியில், நேற்று, நுாறு நாள் திட்ட பணிகள் சமூக தணிக்கை நடந்தது.
ஊராட்சி அலுவலகத்தில் உளுந்தை, தொடுகாடு ஊராட்சிகளுக்கான பயிற்றுனர் ஜி.ரகுபதி பங்கேற்று, கடந்த 2020 - 21, 2021 - 22ம் ஆண்டில், மகாத்மா காந்தி நுாறு நாள் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்து, சமூக தணிக்கை செய்தார்.
மேலும், 2023ம் ஆண்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், ஊராட்சி செயலர்கள், வார்டு உறுப்பினர்கள், கிராம வள பயிற்றுனர்கள் மற்றும் நுாறு நாள் திட்ட பணியாளர்கள் பங்கேற்றனர்.