திருமழிசை:நீதிமன்றங்கள் உத்தரவிட்டும், திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில், திருமணம், பிறந்த நாள், நினைவஞ்சலி போன்றவை உட்பட, பல நிகழ்ச்சிகளுக்கு, 'பேனர்'கள் வைப்பது, தொடர்கதையாக நடந்து வருகிறது.
சாலையோரம் பேனர் வைப்பதில், அரசியல் கட்சியினரிடையே கடும் போட்டியும் நிலவுகிறது. இதற்கு, காவல் துறையினர் சரியான முறையில் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, நெடுஞ்சாலையோரம் பேனர் வைக்கப்படும் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
எனவே, பேனர் வைப்பதை தடுக்க, மாவட்ட நிர்வாகம் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.