ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் தண்டலம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு பள்ளிக் கூடத்தெரு சாலையை பயன்படுத்தி ஊராட்சி மன்ற அலுவலகம், இ- - சேவை மையம், அரசு நடுநிலைப்பள்ளி, குளக்கரை, சிவன் கோவிலுக்கு மக்கள் செல்கின்றனர்.
இந்நிலையில், இந்த தெருவில் கழிவு நீர் செல்ல சிறுபாலம் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு உள்ளது.
இதன் கட்டுமானத்திற்காக பொருத்தப்பட்ட கம்பி விபத்து ஏற்படுத்தும் வகையில் நீண்டு கொண்டு நிற்கின்றன. அந்த வழியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கம்பி மீது தவறி விழுந்து விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளது.
எனவே, இந்த கம்பியை அகற்ற வேண்டும் அல்லது அங்கு தடுப்பு அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்கின்றனர்.