ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் ஆர்.டி.ஓ., அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.
ஸ்ரீபெரும்புதுார் பட்டுநுால்சத்திரம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைந்துள்ளது.
இங்கு, சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு இலவச கண் பரிசோதனை முகாம் நேற்று முன்தினம் நடந்தது.
ஆர்.டி.ஓ., குமரா, மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்று முகாமை துவக்கி வைத்து, சாலை விபத்தை தடுப்பதற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். முகாமில் ஓட்டுனர்கள் பலர் பங்கேற்று கண் பரிசோதனை செய்தனர்.