காஞ்சிபுரம்:நமது நாட்டை காக்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களின் தியாகங்கள் குறித்து, அரசு மற்றும் தனியார் பள்ளி கல்லுாரி மாணவ - -மாணவியருக்கு எல்லைப் பாதுகாப்பு படைவீரரும், 'தியாகம் போற்றுவோம்' அமைப்பின் நிறுவனருமான கிள்ளிவளவன் விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சி நடத்தி வருகிறார்.
அதன்படி, உத்திரமேரூர் பேரூராட்சி ஒன்று முதல் மூன்றாவது வார்டு நடுநிலைப்பள்ளி மற்றும் மருதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில், நமது நாட்டைக் காக்கும் பாதுகாப்புப் படை வீரர்களின் தியாகங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
இதில், நாட்டின் எல்லையில் உள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களுக்கு கடிதம் வாயிலாக, குடியரசு தின வாழ்த்து தெரிவிக்க முகவரியிட்ட அஞ்சல் அட்டைகள் மாணவ - -மாணவியரிடம் வழங்கப்பட்டன.
மாணவர்கள் அனைவரும் தங்களது வாழ்த்துகளை அஞ்சல் அட்டையில் எழுதி அனுப்ப உள்ளனர்.