காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கலெக்டர் ஆர்த்தி அறிக்கை:
காஞ்சிபுரம் மாவட்டத்தில், அனைத்து ஊராட்சிகளிலும் குடியரசு தினத்தில், ஊராட்சி அலுவலகங்களில் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
ஊராட்சி அலுவலகங்களில், ஊராட்சி தலைவர் மட்டுமே,தேசியக் கொடியை ஏற்ற வேண்டும். அவர்களுக்கு பதிலாக, வேறு யாரும் தேசியக் கொடியை ஏற்றக்கூடாது. இதில்,குழப்பம் விளைவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இதுதவிர, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி வகுப்பைச் சேர்ந்த ஊராட்சி தலைவர்கள் கொடி ஏற்றுவதை தடுக்கும் விதமாக யாரேனும் நடந்துகொண்டால், தீண்டாமை மற்றும் வன்கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஊராட்சிகளில், தேசியக்கொடி ஏற்றுவது தொடர்பாக ஏதேனும் பிரச்னை இருந்தால், காஞ்சிபுரம் ஊராட்சி உதவி இயக்குனர் 044 27237175 தொலைபேசி மற்றும் 74026 06005 'மொபைல்' எண்ணில் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.