மும்பை:இந்தியா நடப்பு ஆண்டில், 3.7 லட்சம் டாலர் அதாவது, கிட்டத்தட்ட 300 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக இருக்கும் என, ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
நடப்பு ஆண்டில், இந்தியா கிட்டத்தட்ட 300 லட்சம் கோடி ரூபாய் பொருளாதாரமாக இருக்கும். அத்துடன், பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி, உலகஅளவில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக, அதன் இடத்தை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ளும்.
சமீபத்தில் வந்துகொண்டிருக்கும் தரவுகள், நாட்டின் பணவியல் கொள்கையின் முதல் வெற்றியை குறிப்பதாக உள்ளது.
பணவீக்கமானது சமாளிக்கக் கூடிய விகிதத்திற்கு வந்துள்ளது.
தற்போதைய பணவீக்கம் மற்றும் அன்னிய செலாவணி விகிதங்கள் ஆகியவற்றால், நடப்பு ஆண்டில், இந்திய பொருளாதாரம் 300 லட்சம் கோடி ரூபாயாக உயரும்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பன்னாட்டு நிதியம், இந்தியா 2025ல், உலளவில் நான்காவது பெரிய பொருளாதாரமாக உயரும் என்றும்; 2027ல் மூன்றாவது இடத்துக்கு முன்னேறும் என்றும் கணித்து அறிவித்துஉள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.