பி.பாலகணேசகுமார், புதுக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - -மெயில்' கடிதம்: 'அ.தி.மு.க., ஒன்றிணைந்து, வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வை வீழ்த்த வேண்டும். இதற்காக, பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வத்தை, விரைவில் சந்திக்கும் திட்டமும் உள்ளது' என்று கூறியுள்ளார், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா. இதற்கான காரணத்தை ஆராய முற்பட்டால்...
பன்னீர்செல்வம் மற்றும் பழனிசாமியின், தற்போதைய நிமிர்ந்த நன்னடையை, மீண்டும் கூன் விழச் செய்ய சதி செய்கிறாரோ?
காத்துக் கிடந்தவனுக்கும் இல்லாமல், நேற்று வந்தவனுக்கும் இல்லாமல், கட்சியின் பொதுச்செயலர் பதவியை தட்டிப் பறிக்கத் திட்டம் போடுகிறாரோ?
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கல்லறையில், பரோட்டா மாவு தட்டுவது போல, மூன்று முறை சத்தியம் செய்தாரே சசிகலா... ஒருவேளை, அதன் எதிரொலியா தற்போதைய பேச்சு?
தனித்தனியாக கும்பிடு போடுவதை அனுபவிச்சாச்சு... இனிமேல் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகிய இருவரையும், ஒரே நேரத்தில் தன் பாதங்களின் கீழ் படுக்க வைத்து, ஆசீர்வாதம் வாங்க வைக்கும் விபரீத ஆசை வந்து விட்டதோ?
இல்லை... அரசியலுக்கு லாயக்கற்ற, வசீகரமற்ற குரல், முரட்டுத் தோற்றம், மக்கள் செல்வாக்கின்மை, மீண்டும் ஜெயிலில் களி தின்னும் சூழ்நிலை வந்து விடுமோ என்ற பயத்தில், இருவரிடமும் சரணடைய முற்படுகிறாரா?
இப்படி, பல விதமாக சிந்திக்க வைக்கிறது, சசிகலாவின் அறிவிப்பு. எது எப்படியோ... பழனிசாமியும், பன்னீர்செல்வமும் மீண்டும் சசிகலாவுடன் இணைந்தால், அவர்களின் தவழும் தன்மையையும், தர்மயுத்தத்தையும், கேலி, கிண்டல் செய்து வெளியிட, 'மீம்ஸ் குரூப்' ஒன்று தயாராக காத்திருக்கிறது என்பது மட்டும் நிதர்சனம்.
பழனிசாமியையும், பன்னீரையும் சந்தித்தால், சசிகலாவிற்கு வேண்டுமானால் மாற்றம் வரலாம்; ஆனால், அந்த இருவருக்கும் அன்று முதல் சனி பிடித்து விடும்; அரசியல் வாழ்க்கையின் அஸ்தமனம் துவங்கி விடும் என்பது மட்டும் நிதர்சனம். சசிகலாவின் இந்த அறிவிப்பு விஷயத்தில், இருவரும் உஷாராக இருப்பது நல்லது.
போதையில்லா பண்டிகை கொண்டாடப்படுமா?
மணிபிரபு,
கம்பம், தேனி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொங்கலை
முன்னிட்டு, 'புகையில்லா போகி' என்ற வாசகத்தை முன்வைத்து, தமிழக அரசும்,
சுற்றுச்சூழல் துறையும் சமீபத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தின;
வரவேற்கத்தக்கதே!
அதேபோல, 'போதையில்லா பொங்கல்' என்ற வாசகத்தை
முன்வைத்து, பொங்கலை முன்னிட்டு, நான்கு நாட்களுக்கு மதுபானக் கடைகளை
அடைக்க உத்தரவிட்டு, பின்னர் திறந்தால் நன்றாக இருந்திருக்கும்.
'டாஸ்மாக்'
வாயிலாக, மதுபானங்கள் விற்பனை செய்வதை, முழுமையாக நிறுத்த முடியாது
என்றாலும், பொங்கல், தீபாவளி போன்ற பண்டிகை நாட்களை ஒட்டியாவது, மதுபானக்
கடைகளை அடைக்க வேண்டும்.
காரணம், பண்டிகை விடுமுறை காலங்களில்,
அதிகமானோர் தங்களின் பணத்தை செலவிடுவது, மதுபானக் கடைகளில் தான்.
குடும்பத்தோடு பண்டிகையை கொண்டாடாமல், மதுபானத்தோடு கொண்டாடுவதால்,
விழாவின் நோக்கமே மாறிவிடுகிறது.
எனவே, இனிவரும் ஆண்டுகளிலாவது,
பண்டிகை நாட்களை ஒட்டி, மதுபானக் கடைகளை அடைத்து, 'போதை இல்லாத பண்டிகை'யை
மக்கள் கொண்டாட, தி.மு.க., அரசு அனுமதிக்க வேண்டும். அப்படி செய்தால், மற்ற
மாநிலங்களுக்கும், அது பெரிய முன்னுதாரணமாக அமையும் என்பதில்
சந்தேகமில்லை!
பலகாரங்களுடன் படையலிட்டு என்ன பயன்?
பி.சுபஸ்ரீ,
மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வழக்கம் போல, இந்த
ஆண்டும் திருவள்ளுவர் தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதையெல்லாம்
பார்க்கும் போது, தமிழை தங்களின் பாட்டன் வீட்டு சொத்து போலவும், 2,000
ஆண்டுகளுக்கு முன், திருவள்ளுவர் எழுதிய திருக்குறளை, தங்களின்
பிதுரார்ஜிதம் போலவும், தி.மு.க.,வினர் நினைப்பது தெரிகிறது.
அது
மட்டுமின்றி, தி.மு.க.,வினர் அண்ணாதுரை காலம் தொட்டு, திருவள்ளுவர்,
திராவிடர்களுக்கு மட்டுமே சொந்தம் போல, ஒரு மாயையை ஏற்படுத்தி உள்ளனர்.
திருக்குறளுக்கு, 'பேடண்ட்' வாங்கியுள்ளது போலவும், 'ப்ராண்ட் அம்பாசிடர்' போலவும், அன்று தொட்டு இன்று வரை நடந்தும் வருகின்றனர்.
திருக்குறள்,
பொதுமறை என்பதையும், அது, உலகிலுள்ள அனைத்து மக்களுக்கும் சொந்தம்
என்பதையும், அது பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு, அனைவரையும் சென்று
அடைந்துள்ளது என்பதையும், இவர்கள் வசதியாக மறந்து விட்டனர்.
ஆனால்,
இப்படி திருக்குறளையும், திருவள்ளுவரையும் கொண்டாடும், தி.மு.க.,வினரில்,
௯௦ சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு, ௧௦ முதல், ௨௦ குறள்கள் கூட சரியாக
தெரியாது என்பதே நிதர்சனம்.
சரி, அதை விடுங்கள்... ஆள்பவர்களுக்கு,
அமைச்சர்களுக்கு என, எத்தனையோ அறிவுரைகளை கூறியுள்ளார், வள்ளுவப்
பெருந்தகை. அவற்றில், முதல்வர் ஸ்டாலின் பின்பற்றியுள்ள திருக்குறள் இது
தான்... அதாவது,
'தந்தை மகற் காற்றும் நன்றி அவையத்து
முந்தியிருப்பச் செயல்!' என்பதே!
அதாவது, தன் மகனை சட்டசபையில், மூத்த அனுபவமிக்க அமைச்சர்களை பின்னுக்குத்
தள்ளி, முன் வரிசையில் முந்தி அமரச் செய்திருக்கிறார்... அவ்வளவு தான்.
அதேபோல, முதல்வர் ஸ்டாலினுக்கு பிடிக்காத திருக்குறளும் ஒன்று உண்டு...
அது,
'யாகாவாராயினும் நா காக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு' என்பது.
என்ன
தான் கவர்னர் ரவி, இவருக்கு பிடிக்காத வகையில் நடந்து கொண்டிருந்தாலும்,
ஒரு பொது மேடையில், ஒரு மாநிலத்தின் முதல்வர் பொறுப்பில் உள்ள ஸ்டாலின்,
அவரை ஏக வசனத்தில் பேசியது என்ன நாகரிகம்... திருவள்ளுவர் இவரை
மன்னிப்பாரா... அவரை கொண்டாட, இவருக்கு என்ன அருகதை உள்ளது...
மேலும்,
திருவள்ளுவர் கூறிய அரிய சிந்தனைகளை காற்றில் பறக்க விட்டு விட்டு,
ஆண்டுதோறும் அவருக்கு ஆராதனை செய்வதை, அந்த வள்ளுவரே விரும்ப மாட்டார்.
நுாற்றி
ஏழு குடம் பாலை தலையில் கொட்டி அபிஷேகம் செய்த பின், நுாற்றி எட்டாவது
பால் குடத்தை தலையில் போட்டு உடைத்தது போல உள்ளது, திருவள்ளுவரை போற்றும்,
தி.மு.க.,வினர் மற்றும் முதல்வர் ஸ்டாலினின் செயல்.
அப்பன், பாட்டன் பேச்சைக் கேட்காமல் இருந்து விட்டு, அவர்கள் மறைந்த பின், பல வகை பலகாரங்களுடன் படையலிட்டு என்ன பலன்?
தி.மு.க.,
கட்சியினரே... நீங்கள் ஆட்சிக்கு வந்தால், அடக்கமாக இருப்பது கொஞ்சம்
கஷ்டம் தான்; உங்கள் அதிகாரம் துாள் பறக்கும் என்பது எல்லாருக்கும்
தெரியும். குறைந்த பட்சம் உங்கள் நாக்கையாவது அடக்கி வைக்க பழகுங்கள்.