சென்னை:அரசு கல்லுாரி, பாலிடெக்னிக் மற்றும் பல்கலைகளில், 202.07 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே திறந்து வைத்தார்.
சென்னை, திருவள்ளூர் உட்பட16 மாவட்டங்களில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், பொறியியல் கல்லுாரிகள், அரசு பாலிடெக்னிக்குகள், பல்கலைகள் ஆகியவற்றில், 202.07 கோடி ரூபாயில், வகுப்பறை, ஆய்வகம், கருத்தரங்கு கூடம், விடுதி, மின்னணு நுாலகங்கள் கட்டப்பட்டுள்ளன.
இவற்றை, தலைமை செயலகத்தில், வீடியோ கான்பரன்ஸ் வழியே, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தலைமை செயலர் இறையன்பு, உயர்கல்வித்துறை முதன்மை செயலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.