சென்னை:கூட்டுறவு சங்க இளநிலை ஆய்வாளர் பணி தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டு உள்ளது.
டி.என்.பி.எஸ்.சி., தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அஜய் யாதவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக அரசு துறைகளில், 'குரூப் - 3 ஏ' பதவிகளில், கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர் பதவியில், 14 காலியிடங்கள் மற்றும் கிடங்கு காப்பாளர் பதவியில், ஒரு காலியிடத்துக்கு, வரும் 28ம் தேதி முற்பகலில், எழுத்து தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு, www.tnpsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட் பதிவேற்றப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள், தங்களின் ஒரு முறை பதிவேற்ற பக்கத்தில், விண்ணப்ப எண், பிறந்த தேதியை குறிப்பிட்டு, ஹால் டிக்கெட்டை பதிவிறக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.