சென்னை:முதுநிலை படிப்புக்கான தேர்வு முடிவு நாளை மறுதினம் வெளியிடப்படும் என சென்னை பல்கலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, பல்கலையின் பதிவாளர் இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை பல்கலையின் தொலைநிலை கல்வியில் நடத்தப்படும் முதுநிலை பட்ட படிப்புகள், எம்.சி.ஏ., - எம்.எஸ்சி., - ஐ.டி., ஆகியவற்றுக்கான ஜூன் மாத தேர்வு முடிவுகள், நாளை மறுதினம்வெளியிடப்படும்.
தேர்வர்கள், www.ideunom.ac.in என்ற இணையதளத்தில், மாலை, 6:00 மணிக்கு மேல் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.