திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை வாயிலாக, ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு, 'சோலார் பம்ப்' அல்லது மின் மோட்டாருடன் நுண்ணீர் பாசன வசதி அமைக்க நுாறு சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்திற்கு, 60 லட்சம் ரூபாய் மானியத்தில் 10 பேருக்கு வழங்கப்பட உள்ளது.
தகுதியான விவசாயிகள், வேளாண்மை பொறியியல் துறையின் செயற்பொறியாளர் மற்றும் திருவள்ளூர், திருத்தணி மற்றும் பொன்னேரியில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகங்களை அணுகுமாறு, கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.