கும்மிடிப்பூண்டி:வடமாநிலத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று சென்றது.
கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் ரயில் சென்றபோது, முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்து, அசாம் மாநிலத்தை சேர்ந்த, 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் கீழே விழுந்தார்.
பலத்த காயங்களுடன், தள்ளாடியபடி தண்டவாளத்தை கடந்த அந்த நபர், மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து, கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement