திருத்தணி:திருத்தணி-- அரக்கோணம் சாலையில் உள்ள ஒரு .ஹோட்டலில் நேற்று காலை வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டு இருந்தனர்.
அப்போது ஏசி அறை பகுதியில் நாகப்பாம்பு ஒன்று திடீரென புகுந்தது. பாம்பை பார்த்ததும் சில வாடிக்கையாளர்கள் அவசரமாக வெளியேறினர்.
இதுகுறித்து திருத்தணி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய அலுவலர் அரசு தலைமையிலான வீரர்கள் வந்து, பாம்பை தேட ஆரம்பித்தனர்.
அப்போது சமையல் அறையில் பதுங்கி இருந்த, ஐந்து அடி நீளமுள்ள நாகப்பாம்பை பிடித்து திருத்தணி அருகே உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
இதே ஹோட்டலில் கடந்த மாதம் ஆறு அடி நீளமுள்ள சாரைப்பாம்பு ஒன்று பிடிபட்டதும் குறிப்பிடத்தக்கது .