நிதியை சரியான முறையில் பயன்படுத்தணும் : மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அறிவுரை

Added : ஜன 20, 2023 | |
Advertisement
ஊட்டி;'சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்,'என, அறிவுறுத்தப்பட்டது.ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், மாநில வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஆய்வு செய்த பின் பேசியதாவது:நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊரக

ஊட்டி;'சீரமைப்பு பணிக்கு ஒதுக்கப்பட்ட நிதியை திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்,'என, அறிவுறுத்தப்பட்டது.

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில், மாநில வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் ஆய்வு செய்த பின் பேசியதாவது:

நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் மழை காலங்களில் பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊரக வளர்ச்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை சார்பில் தற்போது நடைபெற்று வரும் பணிகளை மழை காலத்திற்கு முன்பாக விரைந்து முடிக்க வேண்டும்.

இயற்கை இடர்பாடுகளின் போது அனைத்து அரசு துறை அலுவலர்களும் சீரிய முறையில் செயல்படும் வகையில், தொடர்ந்து ஒத்திகை பயிற்சிகள் அளிக்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியினை திட்டமிட்டு சரியான முறையில் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட கலெக்டர் அம்ரித், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனர் மோனிகா ராணா, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட வன அலுவலர் கவுதம் உட்பட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X