கூடலுார்:கூடலுார் செறுமுளி கிராம மக்கள் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் அளித்த மனு:
கூடலுார் செறுமுளி பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானை இரவில் வந்து, விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது.
இதனால், விவசாயிகள் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.
எனவே, காட்டு யானை ஊருக்குள் வருவதை தடுப்பதுடன், பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
இதற்கு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement