செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மணப்பாக்கம் பகுதியில், கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறு மூலம், விவசாயம் செய்து வருகின்றனர். சம்பா பருவத்தில், நெல் அறுவடைக்கு தயாராக இருந்தது.
இதனால், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகம், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அதன்பின், சில தினங்களுக்கு முன், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க, கலெக்டர் ராகுல்நாத், சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, மேற்கண்ட பகுதியில், நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா, ஊராட்சி தலைவர் ரஞ்சித்குமார் தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. திருப்போரூர் வி.சி., - எம்.எல்.ஏ., பாலாஜி துவக்கி வைத்தார். உள்ளாட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.