செங்கல்பட்டு:திருவண்ணாமலையிலிருந்து, ஒரு அரசு பேருந்து, 40க்கும் மேற்பட்ட பயணியருடன், சென்னைக்கு சென்றது.
செங்கல்பட்டு, புலிப்பாக்கம் தேசிய நெடுஞ்சாலையில், பிற்பகல் 2:30 மணிக்கு, முன்னால் சென்ற லாரி மீது, அரசு பேருந்து மோதியது.
இதில், ஓட்டுனர் சிவக்குமார் மற்றும் பேருந்தில் பயணம் செய்த நடராஜ், 55, ஏழு வயது சிறுவன் உட்பட 5 பேர் காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதனால், தென்மாவட்டத்தில் இருந்து, சென்னை செல்லும் அனைத்து வாகனங்களும், போக்குவரத்து நெரிசலில் சிக்கின. ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.