- நமது நிருபர் -
பொதுத்தேர்வு நெருங்குவதால், பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து, ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி வாரியாக, குறிப்பிட்ட பாடத்தில் தோல்வியை தழுவியோர் எண்ணிக்கை, கற்றலில் பின்தங்கியோர் குறித்த விவரங்கள் திரட்டி, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, ஆசிரியர்களிடம் விளக்கம் பெற உத்தரவிடப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக, இணை இயக்குனர்கள் அந்தஸ்திலான அதிகாரிகள், கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்டத்திற்கு, தொடக்க கல்வி இயக்குனரக இணை இயக்குனர் உமா, கூர்ந்தாய்வு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.