பொள்ளாச்சி:பொள்ளாச்சி அருகே, பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில், கும்பாபிேஷக விழா வரும், பிப்., 1ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சி அருகே, சோமந்துறைசித்துார் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில், கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகத்தினர் திட்டமிட்டனர். இதற்காக, பாலாலயம் நடத்தப்பட்டு, கடந்த சில மாதங்களாக திருப்பணிகள் நடக்கின்றன. கோவில் கோபுரம் வர்ணம் பூசுதலை தொடர்ந்து, அன்னதான கூடம் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.
கும்பாபிேஷக விழா வரும், 30ம் தேதி மாலை, 6:30 மணிக்கு வாஸ்து சாந்தி உள்ளிட்ட பூஜையுடன் துவங்குகிறது. 31ம் தேதி காலை, 6:30 மணிக்கு முதற்கால பூஜை துவங்குகிறது.
தொடர்ந்து, ரக் ஷாபந்தனம், யாகசாலை பிரவேசம், கடஸ்தாபனம், திவ்ய பிரபந்த வேதபாராயண துவக்கம், மஹா சுதர்சன ேஹாமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடக்கிறது. மாலை, 6:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை துவங்குகிறது. திவ்யப்ரபந்த வேத பாராயண துவக்கம், சிறப்பு ேஹாமங்கள், ஸ்ரீராமர், ஆஞ்சநேயர், விஸ்வக்சேனர், பரிகார ேஹாமம் உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.
வரும், பிப்., 1ம் தேதி மூன்றாம் கால பூஜை துவங்குகிறது. காலை, 6:00 மணிக்கு கோ பூஜை, காலை, 7:00 மணிக்கு பஞ்சசுக்தாதி ேஹாமம், சகஸ்ரநாம ேஹாமம், மஹாபூர்ணாஹுதி, கடம் புறப்பாடு உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது. காலை, 9:00 மணிக்கு மேல், 10:30 மணிக்குள் மஹா கும்பாபிேஷகம், மஹா அபிேஷகமும் நடக்கிறது.
அதனை தொடர்ந்து, காலை, 8:00 மணி முதல் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவை முன்னிட்டு, வரும், 31ம் தேதி கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.