மாரியம்மன் அங்காளம்மன் கோவிலில் வரும் 27ல் மஹா கும்பாபிேஷக விழா

Added : ஜன 20, 2023 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், வரும், 27ம் தேதி நடக்கிறது.பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, விமான பாலாலயம் கடந்தாண்டு செப்., மாதம் நடந்தது. தொடர்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.விமான கோபுரத்துக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. அம்மனுக்கு, ஒன்பது குண்டம், பரிவார தெய்வங்களுக்கு, நான்கு என

பொள்ளாச்சி:பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் கும்பாபிேஷகம், வரும், 27ம் தேதி நடக்கிறது.

பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், கும்பாபிேஷக விழாவை முன்னிட்டு, விமான பாலாலயம் கடந்தாண்டு செப்., மாதம் நடந்தது. தொடர்ந்து, திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

விமான கோபுரத்துக்கு வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது. அம்மனுக்கு, ஒன்பது குண்டம், பரிவார தெய்வங்களுக்கு, நான்கு என மொத்தம், 13 யாக குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டுள்ளன.

வரும், 23ம் தேதி காலை, விநாயகர் வழிபாடு, புண்யாஹம், அனுக்ஞை, தன பூஜை உள்ளிட்ட பூஜைகளுடன் கும்பாபிேஷக விழா துவங்குகிறது. 24ம் தேதி காலை, விநாயகர் பூஜை, மூலவருக்கு பிரஸன்னாபிேஷகம் உள்ளிட்ட பூஜைகளும்; 25ம் தேதி இரவு, யாகசாலை பிரவேசம், முதற்கால யாக பூஜைகள் நடக்கிறது.

வரும், 26ம் தேதி காலை, 8:30 மணிக்கு இரண்டாம் கால யாகம் துவக்கம், வேதிகார்ச்சனை, காலை, 11:00 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாற்றுதல், 11:30 மணிக்கு பூர்ணாஹுதி, மாலை, 5:30 மணிக்கு மூன்றாம் காலம் யாக பூஜைகள் நடக்கின்றன.

வரும், 27ம் தேதி காலை, 6:00 மணிக்கு நான்காம் கால யாகம் துவக்கம், 9:00 மணிக்கு மஹா பூர்ணாஹுதி, யாத்ராதானம், கடம்புறப்பாடு உள்ளிட்ட பூஜைகளும், காலை, 9:44 மணிக்கு ராஜகோபுரம், மாரியம்மன் விமான கோபுர மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.

அதனை தொடர்ந்து, விநாயகர், முருகப்பெருமான், அங்காளஅம்மன் மற்றும் அன்னை மாரியம்மன் மூலாலய மஹா கும்பாபிேஷகமும் நடக்கிறது.

அன்று, காலை, 11:00 மணிக்கு அன்னதானம், மாலை, 5:00 மணிக்கு மஹா அபிேஷகம், விசேஷ அலங்காரம், மஹா தீபாராதனை, மாரியம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X