பொள்ளாச்சி:பொள்ளாச்சி தொகுதி சார்பாக, எம்.ஜி.ஆர்., 106வது பிறந்தநாள் பொதுக்கூட்டம், வடக்கிப்பாளையத்தில் நடந்தது.
கூட்டத்தில், எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது:
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்., 27ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், எதிர்கட்சி தலைவரும், அ.தி.மு.க.,வின் பொதுச்செயலாளருமான பழனிசாமி அறிவிக்கும் வேட்பாளள் வெற்றி பெற, நாம் அனைவரும் அங்கு சென்று தேர்தல் பணியாற்ற வேண்டும்.
இத்தேர்தலுக்கு பின், இந்த அணி, அந்த அணி என்ற நிலை இல்லாமல், ஒரே தலைவராக பழனிசாமி தலைமையை ஏற்கும் நிலையை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.
கோவை மண்டல தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ராமச்சந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் அறிவழகன், ஜெயசீலன் பேசினர். பொள்ளாச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், முன்னாள் எம்.எல்.ஏ., முத்துக்கருப்பண்ணசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.