உடுமலை:உடுமலையில், சென்டர் மீடியனில் வளர்க்கப்படும் செடிகள் காய்ந்து வருகின்றன.
தேசிய நெடுஞ்சாலையில், உடுமலை பழநி ரோட்டில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ளது. இதில், அழகுக்காக செடிகள் வளர்க்கப்படுகின்றன. இவற்றிற்கு நகராட்சி சார்பில், தண்ணீர் ஊற்றப்பட்டு வருகிறது.
தற்போது சில நாட்களாக, அச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்றாததால், காய்ந்து வருகிறது. இதனால், அவை பொலிவிழந்து காணப்படுகிறது. எனவே, நகராட்சி அதிகாரிகள் அச்செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.