உடுமலை:பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9, 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில கலைத் திருவிழாப் போட்டி கோவையில் நடந்தது.
இதில், குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு மாணவர் பாஸ்கர், நவீன ஓவியம் வரைதல் போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார்.
இவரை, முதன்மைக்கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி வாழ்த்தினார். தலைமையாசிரியர் பழனிசாமி, ஓவிய ஆசிரியர்தியாகராஜன் உட்பட பலர் உடனிருந்தனர்.