சென்னை, சென்னை பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகள், 'ஏ' மற்றும் 'பி' என இரு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, தனித்தனியாக பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மண்டலங்களுக்கு இடையிலான மகளிர் 'பால் பேட்மின்டன்' போட்டி, எத்திராஜ் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
இதில், இரண்டு மண்டலங்களில் வெற்றி பெற்ற அணிகள் மற்றும் இணைப்பு அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' முறையில் நடத்தப்பட்டன.
முதல் பேட்டியில், எம்.ஓ.பி., அணி, 35 - 5, 35 - 15 என்ற கணக்கில் 'ஏ' மண்டல இணைப்பு அணியை வீழ்த்தியது.
மற்றொரு போட்டியில் எத்திராஜ் அணி, 35 - 21, 35 - 21 என்ற கணக்கில் 'பி' மண்டல இணைப்பு அணியை தோற்கடித்தது.
அடுத்தடுத்த போட்டிகளிலும், எம்.ஓ.பி., மற்றும் எத்திராஜ் மற்றும் 'ஏ' மண்டல இணைப்பு அணிகள் வெற்றி பெற்றன.
அனைத்துப் போட்டிகள் முடிவில், எம்.ஓ.பி., வைஷ்ணவ் கல்லுாரி, முதலிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றது.
இரண்டாமிடத்தை, 'ஏ' மண்டல இணைப்பு அணியும், மூன்றாம் இடத்தை எத்திராஜ் அணிகளும் கைப்பற்றின.