செங்குன்றம், செங்குன்றம், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பார்த்திபன், 30; திருமணமாகாதவர். இவரது மனைவி சிவப்பிரியா.
இவர், அதே பகுதியில் உள்ள வீரகாளியம்மன் கோவில் தெருவில், மின் சாதன உபகரணங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.
வியாபார தேவைக்காக பலரிடம், பணம் கடன் வாங்கி, அதை திரும்ப கொடுக்க முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பார்த்திபன், நேற்று முன்தினம் இரவு, கடைக்குள் இருந்த மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து, செங்குன்றம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.