மடிப்பாக்கம், சென்னை மடிப்பாக்கம், ராம் நகர் 18வது தெருவைச் சேர்ந்தவர் ஜெயந்தன், 26.
இவர் குடியிருக்கும் வீட்டை, தன் வீடு எனக் கூறிய, அதே பகுதி எல்.ஐ.சி., நகரைச் சேர்ந்த சங்கர், 54, என்பவர், 5 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு, 'லீசு'க்கு விட்டிருக்கிறார்.
கடந்த 14ம் தேதி 'லீஸ்' ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், ஜெயந்தன் அதை புதுப்பிக்க சங்கரை தொடர்பு கொண்ட போது, அந்த வீடு வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பதும், சங்கர் தலைமறைவானதும் தெரிந்தது.
தான் ஏமாற்றப்பட்டது தெரிந்ததால், இதுகுறித்து மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் ஜெயந்தன் புகார் அளித்தார்.
போலீசார் விசாரணையில், சங்கர் மீது ஏற்கனவே இதுபோன்ற மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிந்தது. தலைமறைவான சங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.