பெங்களூரு,-இலவச மின்சாரம் மற்றும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு காங்கிரஸ் புதிய நிபந்தனை விதித்துள்ளது.
பெங்களூரில் நேற்று மேலவை எதிர்கட்சி தலைவர் ஹரிபிரசாத் கூறியதாவது:
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை காங்கிரஸ் கண்டிப்பாக நிறைவேற்றும். வருமான வரி செலுத்துவோரை தவிர மீதமுள்ள அனைவருக்கும் இலவச மின்சாரம் வழங்குவோம்; அனைத்து பெண்களுக்கும் 2,000 ரூபாய் வழங்குவோம். குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே இத்தொகை கிடைக்கும்.
முன்னாள் முதல்வர் குண்டுராவ், விவசாயிகளின் பம்பு செட்டுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கினார்.
இப்போது சாத்தியம் இருப்பதால் இலவச மின்சாரம் வழங்குகிறோம். எங்களுக்குக் கொடுக்க முடியும் என்பதால்தான் வாக்குறுதி அளித்துள்ளோம்
எங்களது அறிவிப்புகள் வந்த பின், இந்த திட்டங்களுக்கு எங்கிருந்து பணம் வரும் என கேட்கின்றனர். இந்த கேள்விகளுக்கு காங்கிரஸ் ஆட்சி அமைத்த பின், பதில் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.