புளியந்தோப்பு,
புளியந்தோப்பு, போலுநாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் சாந்தா, 69. இவர், தனியாக வசித்து வருகிறார். இவருக்கு, 4 மகன், ஒரு மகள் உள்ளனர். பொங்கல் பண்டிகைக்காக, பெரம்பூரில் வசிக்கும், இளைய மகன் தட்சிணாமூர்த்தியின் வீட்டிற்கு சென்றார். இந்த நிலையில், நேற்று மதியம் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, 50 சவரன் நகை, 6 லட்சம் ரூபாய் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து, புளியந்தோப்பு போலீசார் விசாரிக்கின்றனர்.