பாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு 'குண்டாஸ்'

Added : ஜன 20, 2023 | |
Advertisement
அம்பத்துார் அம்பத்துார், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கல்யாணி, 30. முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 40.இருவரும், கொரட்டூர், மத்திய நிழற்சாலை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களை அடைத்து வைத்து, பாலியல் தொழில் செய்து வந்தனர்.இதையறிந்த ஆவடி மாநகர காவல் ஆணையரக விபசார
 பாலியல் தொழில் செய்த பெண்ணுக்கு 'குண்டாஸ்'



அம்பத்துார் அம்பத்துார், விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் கல்யாணி, 30. முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ், 40.

இருவரும், கொரட்டூர், மத்திய நிழற்சாலை, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில், கேரளா, கர்நாடகா மற்றும் வடமாநிலங்களைச் சேர்ந்த இளம்பெண்களை அடைத்து வைத்து, பாலியல் தொழில் செய்து வந்தனர்.

இதையறிந்த ஆவடி மாநகர காவல் ஆணையரக விபசார தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த 10ம் தேதி, இவர்களை கைது செய்தனர். அங்கிருந்த இரு இளம்பெண்களை மீட்டு, அரசு மகளிர் காப்பகத்தில் சேர்த்தனர்.

இந்த நிலையில், விபசார வழக்குகளில் இரு முறை சிக்கிய கல்யாணியை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய, ஆவடி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய், நேற்று உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X