பொள்ளாச்சி:திண்டுக்கல் --- பழநி வழித்தடத்தில் செல்லும் எக்ஸ்பிரஸ் மற்றும் முன்பதிவில்லா பயணியர் ரயில்களின், நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு வருமாறு:
சென்னை --- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயில் காலை நேரங்களில், 7:23 மணிக்கு உடுமலை ரயில்வே ஸ்டேஷன் வந்து, 7:25 மணிக்கு புறப்படும். 7:52 மணிக்கு பொள்ளாச்சி ரயில்வே ஸ்டேஷன் வந்து, 7:55 மணிக்கு புறப்படும்.
அதேபோல், மறுமார்க்கத்தில் மாலை, 5:12 மணிக்கு பொள்ளாச்சி வந்து, 5:15 மணிக்கு புறப்படும். உடுமலைக்கு, மாலை 5:44 மணிக்கு வந்து, 5.45 மணிக்கு புறப்படும்.
பாலக்காடு - திருச்செந்துார் முன்பதிவில்லா விரைவு ரயில், காலை நேரங்களில், 7:08 மணிக்கு பொள்ளாச்சி வந்து, 7:10 மணிக்கு புறப்படும். உடுமலைக்கு, 7:34 மணிக்கு வந்து, 7:35க்கு புறப்படும். மறுமார்க்கத்தில், உடுமலைக்கு, 7:28 மணிக்கு வந்து, 7:29க்கு புறப்படும். பொள்ளாச்சி, இரவு, 7:58 மணிக்கு வந்து, 8:00 மணிக்கு புறப்படும்.
திருவனந்தபுரம் --- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயிலின் காலை நேர அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த ரயில், வழக்கம் போல் காலை, 5:37 மணிக்கு வந்து, 5:40 மணிக்கு புறப்படும். உடுமலைக்கு, 6:06க்கு வந்து, 6:07 மணிக்கு புறப்படும்.
மறுமார்க்கத்தில், உடுமலைக்கு, மாலை, 6:30க்கு வந்து, 6:32 மணிக்கு புறப்படும். பொள்ளாச்சிக்கு, இரவு, 7:02 மணிக்கு வந்து, 7:05 மணிக்கு புறப்படும். இந்த அட்டவணை மாற்றம், நாளை, 22ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.