அவிநாசி:அவிநாசி கோட்டத்தில் மின் இணைப்புடன் ஆதார் எண் இணைக்கும் பணி, 74 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவிநாசி மின் கோட்டத்தில், 2 லட்சத்து 10 ஆயிரத்து 232 மின் இணைப்புகள் உள்ளன. இதில், ஒரு லட்சத்து 54 ஆயிரத்து 375 மின் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு விட்டன. இது, 74 சதவீதம். இனி, 55 ஆயிரத்து 857 மின் இணைப்புகளை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டியுள்ளது.
'இம்மாதம், 30ம் தேதிக்குள் இணைப்பு பணியை மேற்கொள்ள வேண்டும் என்ற நிலையில், மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.