அவிநாசி:அவிநாசி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட சிலுவைபுரம் பகுதியில், 70க்கும் மேற்பட்ட வீடுகள், சின்னேரிபாளையம் ஊராட்சி கட்டுப்பாட்டிலும், 20 வீடுகள் நடுவச்சேரி ஊராட்சி கட்டுப்பாட்டிலும் உள்ளன.
இதில், நடுவச்சேரி ஊராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வீடுகளுக்கான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில், அவிநாசி ஊராட்சி ஒன்றியம் சார்பில், 15வது நிதிக்குழு மானிய நிதி, 10 லட்சம் ரூபாயில், 'போர்வெல்'லுக்கான மோட்டார் பம்ப்செட் மற்றும், 1,500 மீட்டருக்கு குழாய் விஸ்தரிப்பு பணி மேற்கொள்ளும் பணிக்கு பூமி பூஜை போடப்பட்டது.
ஊராட்சி தலைவர் வரதராஜன், தலைமை வகித்தார். அவிநாசி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஜெகதீசன், துணை தலைவர் பிரசாத்குமார் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள், ஊர் மக்கள் பங்கேற்றனர்.
இப்பணியின் மூலம், குடியிருப்புவாசிகளின் தண்ணீர் வினியோகம் சார்ந்த, நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.