பூந்தமல்லி, சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு, போக்குவரத்து போலீசார் சார்பில், பூந்தமல்லி நசரத்பேட்டை 'சிக்னல்' அருகே ஊர்வலம் நடந்தது.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியபடி, பூந்தமல்லி சாலையில், பள்ளி மாணவ - மாணவியர் அணிவகுத்து சென்றனர்.
மாணவ - மாணவியர், 'ஹெல்மெட்' அணிய வேண்டும், மது அருந்தி வாகனம் ஓட்டக்கூடாது, 'சீட் பெல்ட்' அணிய வேண்டும், வாகனம் ஓட்டும் போது 'மொபைல்போன்' பயன்படுத்தக் கூடாது, சாலை விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, விழிப்புணர்வு செய்தனர்.
ஊர்வலத்தின்போது, வாகன ஓட்டி ஒருவர், விதிமீறி சாலையின் எதிர்திசையில் வந்தார். போக்குவரத்து போலீசார் அவரை எச்சரித்து திருப்பி அனுப்பினர்.