வீணாகும் 'தாட்கோ' கடைகள்

Added : ஜன 20, 2023 | |
Advertisement
அவிநாசி:அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகம் அருகே கட்டப்பட்டுள்ள, 'தாட்கோ' கடைகள் பயனற்று கிடக்கின்றன.அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில், பேரூராட்சி சார்பில் மார்க்கெட் கடைகள் இருந்தன. இக்கடைகளை ஒட்டியபடி உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 'தாட்கோ' சார்பில், 10க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.இக்கடைகளை, துவக்கத்தில்
 வீணாகும் 'தாட்கோ' கடைகள்

அவிநாசி:அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட், வணிக வளாகம் அருகே கட்டப்பட்டுள்ள, 'தாட்கோ' கடைகள் பயனற்று கிடக்கின்றன.

அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்டில், பேரூராட்சி சார்பில் மார்க்கெட் கடைகள் இருந்தன. இக்கடைகளை ஒட்டியபடி உள்ள பேரூராட்சிக்கு சொந்தமான இடத்தில், ஆதி திராவிட மக்கள் பயன்பெறும் வகையில் 'தாட்கோ' சார்பில், 10க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன.

இக்கடைகளை, துவக்கத்தில் குத்தகை அடிப்படையில் சிலர் எடுத்து நடத்தி வந்தனர். நாளடைவில், கடைகளை எடுத்து வியாபாரம் செய்ய யாரும் முன்வராததால், கடைகள் பயனற்று காலியாக கிடந்தன.

இந்நிலையில், பேரூராட்சி பராமரிப்பில் உள்ள மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு, தற்போது, 6 கோடி ரூபாய் மதிப்பில், பேரூராட்சி சார்பில், மூன்றடுக்கு வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.

'தாட்கோ' கடைகள் உள்ள கட்டடத்தை ஒட்டியே புதிய வணிக வளாக கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில் 'தாட்கோ' கடைகளை, இனி, பயன்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், புதிய வணிக வளாக கட்டடத்துக்கும், 'தாட்கோ' கடைகளுக்கும் இடையே, ஒரு அடி மட்டுமே இடைவெளி உள்ளது.


பலமற்ற கட்டடம்



'பயனற்று கிடக்கும் 'தாட்கோ' கடைகள், ஸ்திரத்தன்மை இழந்திருப்பதால் கட்டடங்களை இடிக்க வேண்டும்; அந்த இடத்தை பேரூராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்' என, சில ஆண்டுகளுக்கு முன்பே பேரூராட்சி சார்பில், 'தாட்கோ' மேலாளருக்கு கடிதம் அனுப்பபட்டது. இதை ஏற்காத 'தாட்கோ' நிர்வாகம், 'கட்டடம் நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆதி திராவிட மக்களுக்காக கட்டப்பட்ட கட்டடத்தை இடிப்பதற்கு வாய்ப்பில்லை' எனவும் கூறியுள்ளனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், “வணிக வளாகம் கட்டட கட்டுமானப்பணி முடிந்த பிறகு தான், 'தாட்கோ' கடைகளை பராமரித்து, பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது



வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X